தொல்லியல் துறையின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (08.01.2025) வெருகல் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து பெருங்கவலை தெரிவித்திருந்தனர்.
நமது நிலங்களை மீட்க வேண்டும், ஆக்கிரமிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் உறுதியாக கோரிக்கை முன்வைத்தோடு, ஆர்ப்பாட்டத்தில், இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு தேவை என்பதை வலியுறுத்தினர்.
காணி அபகரிப்பிற்கு எதிராக, வட்டன் கிராமத்திலிருந்து வெருகல் பிரதேச செயலகம் வரை நடைபாதையில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நில பாதுகாப்பு மற்றும் தொல்லியல் துறையின் திட்டங்களை மீறுவதை தடுக்கும் கோரிக்கைகளை வலுப்படுத்தியிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1