இன்று (08.01.2025) பருத்தித்துறை கடலில், இலங்கை கடற்படையின் P421 கலமிலிருந்து சூட்டு பயிற்சி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பயிற்சியின் போது, குறித்த பகுதிக்குள் மீனவர்கள் பிரவேசிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர், யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களத்தின் மூலம் அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளார்.
இதன்படி, இன்று (08) காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணிவரை பருத்தித்துறை கடலில் (23.2NM வடகிழக்கு PPd location) 09°55’N:080°42E, 09°55’N:080°36E, 09°51’N:080°42E, 09°51’N:080°36E ஆகிய கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1