26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
சினிமா

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

டுபாயில் கார் ரேஸிங்கிற்கான பயிற்சியின் போது நடிகர் அஜித் குமாரின் கார் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

நடிப்பைத் தாண்டி ரேஸிங் களத்திலும் தற்போது அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார் அஜித் குமார். புதியதாக `அஜித்குமார் ரேஸிங்’ என்ற குழுவையும் கடந்தாண்டு தொடங்கியிருந்தார்.

டுபாயில் இந்தாண்டிற்கான `24H Dubai’ கார் பந்தயம் ஜனவரி 10 ஆம் திகதி தொடங்கவிருக்கிறது. அதற்கான பயிற்சியை இன்று டுபாய் ஆட்டோடிரோம் ரேஸ் டிராக்கில் தொடங்கியிருக்கிறது அஜித்குமார் ரேஸிங் டீம். அது தொடர்பான புகைப்படங்களும் இன்று அக்குழுவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள்.

பயிற்சிக்காக ரேஸிங் டிராக்கில் அஜித் குமார் ஓட்டிய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அஜித் குமார் பத்திரமாகக் காயமில்லாமல் காரிலிருந்து வெளியேறினார். இது தொடர்பாக அவரின் ரேஸிங் குழு எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “பயிற்சியின்போது அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. அவர் காயமடையாமல் திரும்பிவிட்டார். Another day in the office… that’s racing!.” என ஒரு காணொளியுடன் பதிவிட்டிருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment