தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரே ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கு உயிரிழந்துள்ளது.
இந்த ஒராங்குட்டான், 2009 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவிலிருந்து நன்கொடையாக கிடைத்த “கோனி” ஒராங்குட்டான் தம்பதிக்கு பிறந்தது.
சமீபத்தில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக, ஒராங்குட்டான் உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் 15 வயதுடைய இந்த ஒராங்குட்டானின் சடலம், உயிரிழப்புக்கான காரணத்தைத் தெளிவுபடுத்த பிரேத பரிசோதனைக்காக பேராதனை கால்நடை மருத்துவ பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தையும் விலங்கு ஆர்வலர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், மிருகக்களுக்கான சுகாதார மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.