இலங்கையின் பெற்றோலிய துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தூதருடன் முக்கிய கலந்துரையாடல் இன்று (06.01.2025) நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகார பிரிவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடல் நிகழ்நிலையூடாக நடத்தப்பட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பொருளாதார விவகார பிரிவின் மூத்த பணிப்பாளர் நாயகம், பொருளாதார விவகார பிரிவு இயக்குனர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர், மேலும் முதலீட்டு வாரியத்தின் (BOI) தலைவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1