வேலைக்கான பொலிஸ் நற்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக கந்தளாய் சூரியபுர பொலிஸ் நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர், தமக்கு எதிரான குற்றச்சாட்டை நீக்கி சான்றிதழை வழங்குமாறு கோரிய போதும், சான்றிதழ் சரியாக கிடைக்காததால் அதிர்ச்சியடைந்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக விஷம் குடித்துள்ளார். .
குறித்த நபர் சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நபருக்கு மூன்று வாகன விபத்து வழக்குகள் மற்றும் இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை நீக்கி, தனக்கு பணிக்கான பொலிஸ் சான்றிதழை வழங்குமாறு, பொலிஸாரிடம் கூறியும், அது கிடைக்காததால், விஷம் அருந்தியதாக, பொலிசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1