கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனான அக்கான் பிலால், பத்தின் அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்களை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவனாக அண்மையில் உலக சாதனையை படைத்துள்ளார்.
இது தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி Little Diamond Preschool & Abacus Learning Center மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், அக்கான் பிலாலாவிற்கு காசோலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மேலும், அவருடைய திறமையைப் போற்றும் வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான Abacus Special Competition Winner Award விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவனின் சாதனை அவரது சிறு வயதிலேயே இலக்கண கற்பனைக்கும், சிக்கலான எண்ணியல் திறமைக்கும் ஓர் உறுதியான அடையாளமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1