24.5 C
Jaffna
January 24, 2025
Pagetamil
கிழக்கு

மணல் கடத்தியவர் கைது

அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் கடத்திய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் இன்று (06) இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸார் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமாக மணல் கடத்திய சந்தேக நபர் உட்பட மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இதன் போது 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைது செய்யப்ப்ட்டதோடு குறித்த உழவு இயந்திரம் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றுவது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது .மல்வத்தை பகுதியைச் சேர்ந்த கைதான சந்தேக நபரிடமிருந்து மணல் மீட்கப்பட்டிருப்பதுடன் சந்தேக நபர் மற்றும் உழவு இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன்இ குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரனதுங்க தலைமையில் பொலிஸ் குழுவினர் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிங்களமயப்படுத்தப்படும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை

east tamil

சாகாமம் பாலம் போக்குவரத்து தடை: பெரும் சிரமத்தில் விவசாயிகள், சாரதிகள்

east tamil

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

east tamil

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

east tamil

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

Leave a Comment