ரோஷிங்டியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மியன்மாருக்கு மீளவும் அகதிகளை திரும்ப அனுப்புவது அவர்களின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்றும் துன்புறுத்தல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நாட்டிற்கு தனி நபர்களை அனுப்புவதை தடை செய்யும் சர்வதேச மறுசீரமைப்பு கொள்கைகளை மீறுவதாகவும் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அகதிகள் பாதுகாப்பான வாழ்வாதாரத்துடன் மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையாகும். இதன்மூலம், உலகளாவிய தளத்தில் இலங்கையின் மனிதநேயத்திற்கான மதிப்பும் உயர்ந்துவிடும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்தகைய தீர்மானங்கள் இலங்கையின் சர்வதேச உறவுகள், மனித உரிமை தொடர்பான சுதந்திர ஆவணம் ஆகியவற்றின் மீது நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால், இதை அடிப்படையாக வைத்து ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.