27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
கிழக்கு

தளம் அமைப்பின் விடியல் 3.0 பயிற்சி பட்டறை ஆரம்பம்

திருகோணமலையில் இளைஞர்களின் திறன் விருத்தி சார்ந்து செயற்பட்டு வருகின்ற சமூகமட்ட அமைப்பாக தளம் அமைப்பு அடையாளம் காணப்பட்டு வருகின்றது.

கடந்த ஆறு ஆண்டு கால அனுபவத்துடன் பயணிக்கும் இவ் அமைப்பினால் இன்றைய தினம் (05.01.2025) விடியல் 3.0 என்னும் பயிற்சி பட்டறை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளைஞர்களின் திறன் விருத்தி தொடர்பில் நடைபெறும் பயிற்சிகளில் ஒரு கட்டமாக இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விஷேடமான விடியல் 3.0 பயிற்சி பட்டறை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாழ்வியல் திறன்கள் தொடக்கம் தொழில்நுட்பத்திறன்கள் வரையான 32 தலைப்புகளில் விசேட பயிற்சிகள் இப் பயிற்சி பட்டறை வழங்கப்படவுள்ளதாக தளத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளதோடு, இம் 32 தலைப்புக்களுக்கும் விசேட வளவாளர்கள் ஒழுங்கு செய்யப்பட்டு திருகோணமலையில் கற்பதற்கு வாய்ப்பற்ற தலைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இப்பயிற்சி பட்டறை திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிழக்கு மாகாணத்திற்கும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி வலியுறுத்தல்

east tamil

வாழைச்சேனையில் கசிப்பு வேட்டை

Pagetamil

கிழக்கு மாகாண சுற்றுலா துறையை மேம்படுத்த முயற்சி

east tamil

திருகோணமலையில் சதுப்புநிலங்கள் பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

east tamil

மட்டக்களப்பின் சுற்றுலா துறையை வலுப்படுத்தும் பணிகள் ஆரம்பம்

east tamil

Leave a Comment