26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ் 4 இயந்திரத்தில் கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் வைக்கப்பட்டிருந்த காராமணி பயறு விதைகள் வெற்றிகரமாக முளைக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரா தெரிவித்துள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் முதல்கட்ட விண்கலங்கள் 2028-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதையடுத்து, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் 20 கிமீ இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன. தொடர்ந்து இவற்றின் தூரம் படிபடியாக குறைக்கப்பட்டு ஜனவரி 7-ம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் விண்வெளியில் வலம்வரும் ஸ்பேடெக்ஸ் பி விண்கலன் தனது கேமரா மூலம் எடுத்துக்கொண்ட செல்பி வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க இருக்கின்றன. அவற்றில் இஸ்ரோ வடிவமைத்த ரோபோட்டிக் ஆர்ம் (Debris Capture Robotic Arm), கிராப்ஸ் (CROPS-Compact Research Module for Orbital Plant Studies) ஆகிய ஆய்வுக் கருவிகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘சிறியளவிலான கைகள் போன்றுள்ள ரோபோட்டிக் ஆர்ம் கருவி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் விண்ணில் நகர்ந்து செல்லும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் விண்வெளியில் ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டால் அதிலுள்ள பழுதுகளை சரிபார்த்தல் உட்பட பணிகளை எளிதில் செய்ய ரோபோட்டிக் ஆர்ம் உதவும். அதேபோல், விண்வெளி சூழலில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட கிராப்ஸ் கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு(cowpea) விதைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து அவை வளர ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எஞ்சியுள்ள கருவிகளும் தனது ஆய்வை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன ’’என்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment