சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை பயன்படுத்தி பறவைகளை கொன்ற நபர்கள் கொக்கட்டிசோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வாழ்வு நடத்தும் வெளிநாட்டு அரிய வகை சுற்றுலா பறவைகள், சட்டவிரோத முறையில் கொல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
இதன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் கொக்கட்டிசோலை பொலிஸார் நடத்திய வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான காரில் தடை செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் கொல்லப்பட்ட பறவைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிசோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1