இவ் வருடம் (2025) முதல் ஆரம்பமாகியுள்ள தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக நேற்றைய தினம் (02) பொலனறுவை பராக்கிரம சமுத்திரத்தில் சிரமதானம் ஒன்று நடைபெற்றது.
வேகமாக பெருகிவரும் நீர்வாழ் தாவரங்களை அகற்றும் நோக்குடன் குறித்த சிரமதானம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது வீடமைப்பு இராஜாங்க அமைச்சரும் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டி.பி.சரத் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ரத்னசிறி, பத்மசிறி பண்டார மற்றும் மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட வடிகாலமைப்பு திணைக்களத்தின் அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1