27 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

பெண் எம்.பியின் முறைப்பாட்டால் ஒருவர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டஹச்சியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவை பகிர்ந்ததற்காக முன்னாள் மில்லனியா பிரதேச சபை உறுப்பினர் ரவீந்திர நவமுனி கைது செய்யப்பட்டுள்ளார்.

நவமுனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை படகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சியின் சார்பில் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த முறைப்பாட்டில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவர் பெண் எம்பியின் நற்பெயரை குறிவைத்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், அவர் பணத்திற்காக தன்னுடன் ஹோட்டலுக்கு சென்றதாக பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

Pagetamil

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன காலமானார்

Pagetamil

ஜேவிபி ஆட்சியில் அரசியல் செல்வாக்கில் நடந்த கைது: முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பு போராட்டம்!

Pagetamil

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment