நேற்று முன்தினம்(31) இரவு ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையத்தால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள், சட்ட விரோதமாக வாகனங்கள் செலுத்திய குற்றத்திற்காக 130 பேர் மீது ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி பிரதீப் விஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுற்றிவளைப்பின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய நால்வரும், வாகனங்களை தவறான முறையில் செலுத்திய 109 பேரும், பலதரப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த 17 பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளதாகவும் இவ்வாறான சுற்றிவளைப்பு தொடர்ந்து நடைபெறும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1