திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

Date:

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இடமாற்றம் பெற்று சென்றதுடன், புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக நேற்று (01) மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் பதில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘டக்ளஸின் செயல் சட்டவிரோதமானது; உரிய நேரத்தில் கவனிப்போம்’: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா (டக்ளஸ் தேவானந்தா)விடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு...

கருணவுக்கு கள்ள பாஸ்போர்ட் கொடுத்ததும் சுரேஷ் சாலேதான்!

வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக, போலியான...

பொலிஸ்மா அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது!

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்