திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியதாக கண்டறியப்பட்ட பெண்ணில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் மீகமுவ தன்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த றீட்டா பெரேரா என்ற 86 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குறித்த கடற்கரையின் ஓரமாக கைப் பையும், ஆடைகளுடன்கூடிய பயணப்பையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1