24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
கிழக்கு

தொல்லியலின் பெயரில் பறிபோகும் விவசாய காணிகள், காப்பாற்றுமாறு மக்கள் கோரிக்கை

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜயாநகர் கிராமத்தில் வசிக்கும் கணவனை இழந்த தாய் பலவருட காலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த தனது காணியில், தான் மேற்கொண்டுள்ள விவசாயத்தை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு முதல் பல்லுவக்குளம் பகுதியில் 4.5 ஏக்கரில் நெற்செய்கை, கச்சான், உழுந்து, பயறு போன்ற பயிர்களையும் செய்து வரும் குறித்த தாய் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த 2024 ஒக்டோபர் மாதம் 20ம் திகதி சிலர் அவ்விடத்திற்கு வந்து பார்வையிட்டு விவசாய நிலத்தை புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் ,மறுநாள் 21ம் திகதி குச்சவெளி பொலிசாரினால் குறித்த தாய் கைது செய்யப்பட்டிருந்தார் என தகவல்கள் வெளியாயிருந்தன.

தொல்லியலுக்குரிய கல்லு போடப்பட்டிருக்கும் பகுதியில் விவசாயம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2024 நவம்பர் மாதம் 27ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த காணியில் 2012ஆம் ஆண்டில் இருந்து தாம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்குரிய அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எவ்வித அறிவித்தலும் இன்றி அரிமலை பிக்குவின் தலைமையில் தமது வயலின் ஓரமாக குறித்த கல்லு போடப்பட்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல வருட காலமாக பயிர் செய்து வந்த காணிக்குள் தற்போது செல்ல பயமாக இருக்கிறது எனவும் கடன்பட்டு செய்த வேளான்மை பயிராக மாறியிருக்கின்றதுடன் தற்போது அழியும் நிலை காணப்படுவதாகவும், இது அழியுமானால் தாம் தற்கொலைதான் செய்ய வேண்டும் எனவும் அவர் கவலை வெளியிடடார்.

தொல்லியல் எனும் பெயரில் சில புத்த பிக்குகளால் புதிது புதிதாக மக்களினுடைய காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொல்லியல்’ எனும் பெயரில், சில புத்த பிக்குகள் புதிது புதிதாக மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வருகின்றனர் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

மணல் கடத்தியவர் கைது

Pagetamil

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil

சாய்ந்தமருதில் தற்கொலை

east tamil

Leave a Comment