மட்டக்களப்பு புளியந்தீவில் 16 அடி நீள முதலை உயிருடன் கைப்பற்றப்பட்டது.
மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில், சுமார் 16 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை – 29.12.2024) மாலை பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு ஆற்றில் பாய்ந்து திரிந்த இந்த முதலை, ஞாயிற்றுக்கிழமை மாலை கரை நோக்கி வந்ததாக அறியப்படுகிறது. இதனை பொதுமக்கள் தைரியமாக கையாள்ந்து உயிருடன் பிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1