புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
ரியர் அட்மிரல் காஞ்சனா பனாகொட- பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
1989 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் கடட் அதிகாரியாக இணைந்து கொண்டார்.
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்த பின்னர், அவர் 1991 இல் உப லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார். ற்றும் 1993 ஆம் ஆண்டில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் தனது உப-லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியை முடித்தார்.
ரியர் அட்மிரல் காஞ்சனா பனகொட, 4 மே 2022 அன்று ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
அவர் 2009 இல் பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியையும், 2015 இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை (மனித வள முகாமைத்துவம்) பட்டத்தையும், 2019 இல் அவுஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தில் கடல்சார் கொள்கை முதுகலையும் முடித்தார்.
2021 இல் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறியை கொழும்பு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார்.
ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட தனது சேவையின் போது, விரைவுத் தாக்குதல் ரோந்துக் கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், கடற்படைப் பயிற்சிப் பணிப்பாளர், தென்கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி, வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி எனப் பணிபுரிந்து கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.