27 C
Jaffna
January 2, 2025
Pagetamil
கிழக்கு

நிந்தவூரில் அனாதை சிறுவர்களுக்கான கல்வி நிலைய அடிக்கல் நாட்டு நிகழ்வு

அநாதை சிறுவர்களுக்கான கல்வி நிலையமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம் (29) நிந்தவூரில் மேற்கொள்ளப்பட்டது.

ஆஸ்திரேலியாவிலிருந்து இயங்குகின்ற OPEN Feed நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான காத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அலவி ஷரீஃப்டீன் அவர்களால் அனாதை சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 3 மாடிகளைக்கொண்ட கல்வி நிலையம் ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நிந்தவூர் பிரதேசத்தில் நாட்டப்பட்டது .

நிந்தவூர் மனிதாபிமான பணிகளுக்கான மையம் (CHA) அமைப்பின் தலைவர் சட்டத்தரணி எம் ஐ உமர் அலி அவர்களது அழைப்பின் பேரில் இந்நிகழ்வு நேற்றைய தினம் நிந்தவூர் 25ம் பிரிவில் இடம்பெற்றது.

இலங்கை முழுவதும் சுமார் 3000 அனாதை சிறார்களுக்கு கல்விக்கான புலமைப் பரிசில்கள் அலவி ஷரீஃப்டீன் அவர்களின் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

மேலும், இந்நிகழ்வின் போது, CHA அமைப்பின் தலைவரால் ஆற்றப்பட்ட தலைமைஉரையில், கலாநிதி அலவி ஷரீஃப்டீன் அவர்கள், தனது பிறந்த மண்ணுக்காக மட்டுமன்றி சர்வதேசமெங்கும் தன்னாலான மனிதநேயப் பணிகளை கொண்டு மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

ஏனைய உதவி வழங்கும் நிறுவனங்கள் போல் அல்லாது மிகவும் வித்தியாசமான முறையில் புலமை பரிசில் திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி கட்டுக்கோப்புடன் நடைமுறைப்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியான கலாநிதி அலவி ஷெரிப்தீன் அவர்கள் உரையாற்றுகையில் “எமது பிரதேசத்து மாணவர்கள் சிறப்பான பழக்கவழக்கம் உடையவர்களாக, நல்ல கல்விமான்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டதுடன் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பது போன்ற சுத்தமான, நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகளில் கல்வி கற்கக்கூடிய இடங்களை நாடெங்கிலும் அமைக்க வேண்டும் என்பது தனது கனவாகும் என்பதுடன் எந்த ஒரு பிள்ளையும் தனக்குத் தகப்பன் இல்லாததை காரணமாக கொண்டு கல்வி கற்பதிலிருந்து நின்று விடக்கூடாது, அவர்கள் எதிர்காலம் இருளடைந்து விடக்கூடாது. ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அச்சமுகத்தின் கல்வி நிலையிலேயே தங்கி உள்ளது என்று உரையில் குறிப்பிட்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய இடைக்கால அரசாங்க அதிபர் நியமனம்

east tamil

காணிகள் கையகப்படுத்தலை எதிர்த்து குச்சவெளி பிரதேசத்தில் மக்கள் போராட்டம்

east tamil

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Update: மீகமுவ பெண்ணின் சடலம் திருகோணமலையில்!

east tamil

வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு

east tamil

Leave a Comment