திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில், கலாச்சார அமைச்சின் ஏற்பாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கலாச்சார போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள் ரபான் நிகழ்ச்சியில் 2ம் இடத்தைப் பெற்று, கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தி பயிற்றுவித்த ஆசிரியர் எம்.ஐ.எம். அமீர் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் சார்பாக பாராட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த சாதனை, கல்லூரியின் கலாச்சார முன்னேற்றத்தை மேலும் உயர்த்தும் வகையில் காணப்படுவதாக உள்ளதோடு, இதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மேடைகளிலும் அதிகம் பங்களிப்பு செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.