கடந்த புதன்கிழமை (26) கிறிஸ்மஸ் பண்டிகை அன்று திருகோணமலை மாவட்ட அரச அதிபர் , பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பீலியடி பிரதேசத்தில் அப் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றது.
பீலியடி கிராமத்தில் கிரவல் வெட்டுவதற்காக பீலியடி கிராம சேவக உத்தியோகத்தரூடாக பிரதேச மக்களின் அனுமதியை கேட்பதற்காக கிறிஸ்மஸ் தினமன்று மதியம் 1.30 மணிக்கு கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தின் போது, பீலியடி பிரதேசத்தில் உள்ள கிரவல் மண்ணை வெட்டுவதற்கான அனுமதி கோரப்பட்டதை தொடர்ந்து, பீலியடி சன சமூக நிலையமும் மக்களும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் கிரவல் வெட்டுவதற்காக அனுமதியினை தரமாட்டோம் என தம் மறுப்பை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1