கடற்சுழியில் சிக்குண்டு செல்லப்பட்ட அமெரிக்க பிரஜை மூவர் திருகோணமலையில் காப்பாற்றப்பட்டனர்.
திருகோணமலை கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க பிரஜைகள் கடலின் Current சுழியில் சிக்குண்டு ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட அனர்த்தம் நேற்றைய தினம் (28) மாலை 6.45 மணியளவில் Rainbow Hotel க்கு பின்னால் ஏற்பட்டது.
இவர்களை காப்பாற்றும் பொருட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
திருகோணமலை பொலிஸ் குழுவின் விரைவான செயல்திறனின் மூலம் பொலிஸ் சார்ஜன் நயிம் ( 54427) அவர்களின் தலைமையில், திஸ்ஸாநாயக்க(57681), பொலிஸ் சார்ஜன் குமாரசிங்க (60563) பொலிஸ் சார்ஜன் சுரேந்ர (66364), பொலிஸ் சார்ஜன் நிசங்க (75243), பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயதிலக்க (82652) ஆகியோர் இணைந்து குறித்த அனர்த்தத்திற்குள்ளாகியிருந்த மூன்று அமெரிக்க பிரஜைகளையும் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி 45மணி நேர பாரிய போராட்டத்தின் பின்னர், அவர்களை காப்பாற்றி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
பின்னர் அனர்த்தத்திற்குள்ளாகிய மூன்று அமெரிக்கர்களும், அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.