26.6 C
Jaffna
January 1, 2025
Pagetamil
கிழக்கு

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சந்தேக நபர்கள் கைது

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை 27) விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாக்குதலினால் நிலைகுலைந்த குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த வியாழக்கிழமை (26) முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது. வழமை போன்று அம்முறைப்பாட்டை ஆராய இரு தரப்பினரை வரவழைத்த பொலிஸ் அதிகாரி, விசாரணை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருந்தார்.

குறித்த விசாரணை பொலிஸ் அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை, முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் திடிரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.

இதன் போது உடனடியாக செயற்பட்ட அப்பொலிஸ் அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்த நிலையில் பொலிஸ் அதிகாரியை திடிரென குழுவாக இணைந்து பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் தாக்கியுள்ளனர்.

இதன் போது சற்றும் எதிர்பார்க்காத குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை, சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை, வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகள் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக அவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாமிந்த ஹெட்டியாரச்சி புதிய பதவிக்கு நியமனம்

east tamil

Update: மீகமுவ பெண்ணின் சடலம் திருகோணமலையில்!

east tamil

வாழைச்சேனை கடற்பரப்பில் கரையொதுங்கிய மியன்மார் படகு

east tamil

மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம படகு

east tamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

Leave a Comment