கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

Date:

உள் நாட்டுப் போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவுகள் உள்ளதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (26.12.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானவை போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமல் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்ட செயலகவளாகம், கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்த காணி, கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு உகந்த சந்திரன் பூங்கா இருந்த காணி, உள்ளிட்ட நகர்ப்புறக் காணிகள் பலவற்றை இன்றளவும் இராணுவத்தினர் வசமே உள்ளது.

நகரின் முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சமநேரத்தில் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அது தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

441 ஏக்கர் விஸ்தீரணம் உடைய வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணையின் 410 ஏக்கர் காணி தற்போது வரையில் இராணுவத்தின் வசமுள்ளது.

இதனை விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தின் நூற்றுக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதால் பொதுப்பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் வகையில் அமைவிடத்தைக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுப்பயன்பாட்டு நிறுவனங்களை அண்மித்தும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதென்ற தீர்மானத்தை நிறைவேற்றி அதன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்