வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Date:

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (25) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்மஸ் தினமான நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மற்றைய நபர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவத்தில் யாழ் அராலிபகுதியை சேர்ந்த ப.சஞ்சயன் என்ற 22 வயதான இளைஞரே மரணமடைந்தவராவார்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்