கந்தபொல மற்றும் மகஸ்தோட்டையில் 500 குடும்பங்களுக்கு நிவாரணம்

Date:

கந்தபொல மற்றும் மகஸ்தோட்டை பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக மோசமான காலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆதரவற்ற நிலையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் ஹொங்கொங் ஷக்யமுனி கலாசார அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

நாளை (27.12.2024) காலை 9.30 மணிக்கு கந்தபொல ஸ்ரீ ஜினேந்திரராமய ஆலயத்தில் வணக்கத்திற்குரிய தம்பகொலே சோமானந்த நாயக்க சுவாமிகள் தலைமையிலும், மதியம் 1.00 மணிக்கு மகஸ்தோட்டை ஸ்ரீ தர்மாராம ஆலயத்தில், வணக்கத்திற்குரிய உடுவே தம்மின்ன சுவாமிகள் தலைமையிலும் குறித்த ஒழுங்கு மேற்கொள்ள ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மொலகொட கொடமுதுங்கல ரஜமஹா விஹாராதிகாரி சிரேஷ்ட விரிவுரையாளர் மொரகஸ்வே விஜித தேரர் மற்றும் நுவரெலியா மக்கள் அறக்கட்டளை சேனா சூரியப்பெரும, பொக்காவல பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி, கந்தபொல பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி, நுவரெலியா மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரால் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையை கடந்த அமெரிக்க போர்க்கப்பல்கள்!

ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹோர்முஸ்...

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புக்களை வழங்க தயாராகும் சீனா?

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க...

தையிட்டி விகாரை காணிகள் விரைவில் அளவீடு!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்