2 சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!

Date:

நோர்வூட் சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (24) காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தேயிலை மலையில் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தேயிலை மலையின் அடிவாரத்தில் இரண்டு குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த இரண்டு குட்டிகள் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து, இந்த இரண்டு குட்டிகளும் சிறுத்தையின் குட்டிகள் என உறுதிசெய்யப்பட்டது.

எனவே இரண்டு குட்டிகளையும் நேற்று இரவு தாய் சிறுத்தை ஈன்றெடுத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததோடு மீட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளையும் அதே இடத்தில் வைக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த தேயிலை மலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அறிவித்ததாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு குட்டிகளும் காணப்பட்ட பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று அழைந்து திரிவதாகவும் அந்த பகுதிக்கு சென்று தொழில் புரிய முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

எனவே இது தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் உச்சதலைவரை சந்தித்தார் சபாநாயகர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் குறித்து விவாதிப்பதற்காக, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர்...

உளறல் மன்னனுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்ற மரபுகளுக்கும் நிலையியல் கட்டளைகளுக்கும் (Standing Orders) அமையச் செயற்படுமாறு நாடாளுமன்ற...

‘டக்ளஸின் செயல் சட்டவிரோதமானது; உரிய நேரத்தில் கவனிப்போம்’: உயிர்த்த ஞாயிறு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட தகவல்!

சமீபத்தில் கதிரவேலு நித்தியானந்த தேவானந்தா (டக்ளஸ் தேவானந்தா)விடமிருந்து வாக்குமூலம் ஒன்று பதிவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்