27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

“மொஸ்கோவில் வாழ இயலாது. அதனால் எனக்கு விவாகரத்து வேண்டும். லண்டன் செல்ல சிறப்பு அனுமதி வேண்டும்” என்று சிரியாவிலிருந்து வெளியேறிய முன்னாள் ஜனாதிபி பஷார் அல் ஆசாத்தின் மனைவி அஸ்மா அல் ஆசாத் கோரியுள்ளார். ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் இது தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக அரபு மற்றும் துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சிரி​யா​வில் ஜனாதிபதியாக இருந்த பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு புரட்சி வெடித்​தது. ஆசாத் படைகளுக்​கும் கிளர்ச்சிப் படைகளுக்​கும் இடையே பல ஆண்டு​களாக போர் நடைபெற்​றது. இதில் சுமார் 5 இலட்சம் பேர் உயிரிழந்தனர்.

எனினும், ஈரானும், ரஷ்யாவும் இராணுவ உதவி புரிந்ததால், ஆசாத்தின் ஆட்சி காப்பற்றபபட்டது.

இந்நிலை​யில், கடந்த நவம்பர் 27ஆம் திகதி சிரியா ராணுவத்​துக்கு எதிராக மிகப்​பெரிய போரை துருக்கி ஆதரவு பெற்ற எச்டிஎஸ் கிளர்ச்​சிப் படை தொடங்​கியது. அதேநேரம், ஈரானும், ரஷ்யாவும் ஆதரவு தராததால் ஆசாத் தலைமையிலான சிரியா இராணுவம் பின்னடைவை சந்தித்​தது. இதனால் முக்கிய நகரங்களை கைப்​பற்றிய எச்டிஎஸ் வீரர்​கள், தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8ஆம் திகதி கைப்​பற்றினர். இதையடுத்து, ஆசாத் ரஷ்யா​வுக்கு தப்பிச் சென்​றார். அவர் செல்வதற்கு முன்னதாகவே அவரது குடும்பத்தினர் அங்கு சென்றுவிட்டனர்.

இந்தப் பின்னணியில் தான் ஆசாத்தின் மனைவி அஸ்மா விவாகரத்து கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததோடு மொஸ்கோவில் இருந்து வெளியேற சிறப்பு அனுமதியும் கோரியுள்ளார். அஸ்மா பிரிட்டிஷ் – சிரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் 2000 ஆம் ஆண்டில் தனது 25வது வயதில் சிரியா சென்றார். அங்கு பஷார் அல் ஆசாத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மனிதாபிமான அடிப்படையில் பஷர் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா புகலிடம் வழங்கியது. ஆனால் அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளனர். அசாத் தற்போது மொஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கவோ அனுமதிக்கப்படவில்லை.

மேலும், 270 கிலோ தங்கம், 2 பில்லியன் டொலர் ரொக்கம், மெஸ்கோவில் உள்ள 18 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட ஆசாத்தின் சொத்துக்களை ரஷ்ய அரசாங்கம் முடக்கியுள்ளது. பஷர் அல்-அசாத்தின் சகோதரர் மகேர் அல்-ஆசாத்தின் புகலிடக் கோரிக்கையை ரஷ்யா ஏற்கவில்லை என்றாலும், அது இன்னும் பரிசீலனைக்காக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

அஸ்மாவின் இரட்டைக் குடியுரிமை இங்கிலாந்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்படுவதை எளிதாக்கும்.

கணவரின் சர்ச்சைக்குரிய ஆட்சியில் இருந்து விலகி லண்டனில் தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க அஸ்மா ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பஷார் அல் ஆசாத் ரூ.2 ஆயிரம் கோடியை ரஷ்யா​வுக்கு எடுத்​துச் சென்​றதாவும், இந்தத் தொகையை கடந்த 2018 மற்றும் 2019 காலகட்​டத்​தில் ரஷ்யா​வுக்கு அனுப்பி வைத்திருப்​பதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

அதேபோல், மொஸ்​கோ​வின் நுகோவோ விமான நிலையம் சென்​றடைந்த கரன்​சிகள் அந்நாட்டு வங்கி​களில் டெபாசிட் செய்யப்பட்​ட​தாக​வும், ஆசாத்​தின் உற​வினர்​கள் இதே ​காலத்​தில் ரஷ்​யா​வில் ரகசி​யமாக சொத்துகளை வாங்​கியதா​வும் தகவல் வெளி​யானது. சிரியாவிலிருந்து பஷார் அல் ஆசாத் வெளியேறிவிட்டாலும் அவரையும், அவரது குடும்பத்தையும் சுற்றிய பரபரப்பு செய்திகள் மட்டும் குறைந்தபாடில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

பிரான்ஸை உலுக்கிய பாலியல் வல்லுறவு வழக்கு: சொந்த மனைவியை கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய கணவன், 50 ஆண்களுக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment