நேற்றைய தினம் (21.12.2024) திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் கடந்த பொதுத்தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் திருகோணமலை மாவட்ட முக்கியஸ்தர்களான வைத்தியர்.ஹில்மி முகைடீன் மற்றும் வைத்தியர். ஹில்மி மஹ்ரூப் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கட்சியின் ஆட்சியை ஆதரித்த மக்களுக்கு அன்பையும், பெருமைகளையும் பகிர்ந்துகொள்வதை நோக்காகக் கொண்ட இந்த சந்திப்பு, பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களுடன் நேரடியாக இணைந்து, கட்சியின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் திட்டங்களை வலுப்படுத்தவும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், உள்ள பொறுப்புகளை மீறாது செயல்படுவதை உறுதி செய்வதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.