28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை 28 ரூபாவாக குறைந்துள்ளது.

அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர இன்று (21) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சந்தையில் முட்டையின் விலை மேலும் குறையலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டையின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்து முட்டைகளை பதுக்கி வைத்திருந்த மக்கள் சந்தையில் முட்டைகளை வெளியிடுவதால் எதிர்காலத்தில் முட்டையின் விலை மேலும் குறையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலங்களில் நுகர்வோர் முட்டை மற்றும் கோழி இறைச்சியை தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கால்நடை தீவனத்தின் விலை அதிகரிப்பு மற்றும் முட்டையின் விற்பனை விலை குறைவினால் தாம் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக கோழி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

ஜேவிபி ஆட்சியை தக்க வைக்க யாழில் சங்கம் அமைத்த குழு!

Pagetamil

Leave a Comment