இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரபல நடிகை மகேஷி மதுஷங்கவின் கணவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது கணவர் மீது மகேஷி தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, அவர்களது வீட்டுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பொரலஸ்கமுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பதியினருக்கிடையில் நேற்று முன்தினம் (19) இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகை இரவு நேரம் பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தொலைபேசியில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், இரவு சுற்றுக் காவலில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் உட்பட இரு கான்ஸ்டபிள்கள் நடிகையின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டின் முன்பகுதில் இருந்த நாற்காலியில் இருந்து நடிகை தனது முறைப்பாட்டை பதிவு செய்து கொண்டிருந்த போது, அவ்விடத்திற்குள் புகுந்த கணவர், பொலிஸ் சார்ஜன்ட்டின் முகத்தை காலால் தாக்கினார். சார்ஜண்ட் நாற்காலியில் இருந்து சில அடி தூரத்தில் விழுந்துள்ளார்.
அவ்விடத்திற்கு சென்ற சந்தேகநபர் சார்ஜன்டை கழுத்தை நெரிக்க முற்பட்ட போது, அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் சார்ஜண்டை காப்பாற்ற முற்பட்ட போது, சந்தேக நபர் அவர்களையும் காலால் தாக்கியதில், கான்ஸ்டபிள் ஒருவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார்.
மற்றைய கான்ஸ்டபிள் படுகாயமடைந்த சார்ஜென்ட் மற்றும் கான்ஸ்டபிளை மிகுந்த முயற்சியுடன் வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் எதிர்பாராத தாக்குதலால் சார்ஜன்ட்டின் இடது கண்ணும், கான்ஸ்டபிளின் வலது காலும் பலத்த காயம் அடைந்தன.
மகேஷ் மதுஷங்கா 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு தனது 10 வது திருமண நாளை கலைஞர்களுடன் விருந்துடன் கொண்டாடினார். விமான கப்டனாக இருந்தவர் மகேஷியின் கணவர். இரண்டு குழந்தைகளின் தாயான மகேஷி, கடந்த பொதுத் தேர்தலில் காலி மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் சார்பில் மைக் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த கட்சியை லைக்கா நிறுவனம் பின்னணியிலிருந்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.