Pagetamil
இலங்கை

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்து இன்று (20.12) வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

15 இலட்சம் ரூபாய் காசோலை நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்களது பிரத்தியேக செயலாளரை வியாழக்கிழமை (19.12) மாலை மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இன்று (20.12) காலை கைது செய்யப்பட்டார்.
வவுனியாவில் காணியொன்றை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டு, 18 இலட்சம் ரூபாவை அவர்கள் பெற்றுள்ளனர். எனினும், காணியை பெற்றுக்கொடுக்கவில்லை. பணம் கொடுத்தவர், பணத்தை திருப்பி கேட்டபோது, 3 இலட்சம் ரூபாவை திருப்பி செலுத்தியுள்ளனர்.

குறித்த இருவரையும் வவுனியா நீதிமன்றில் பெலிசார் முற்படுத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் 3 இலட்சம் ரூபாய் பணத்தினை முறைப்பாட்டாளருக்கு செலுத்திய நிலையில், குறித்த இருவரையும் சரீர பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

வடக்கு அரச உத்தியோகத்தர்களின் கவனத்துக்கு: அலுவலகம் போகும்போது இடைநடுவில் நிற்கும் அபாயத்தை தவிர்க்க!

Pagetamil

நல்லூர் கந்தன் வடக்கு நுழைவாயில் வீதி வளைவுக்கு அடிக்கல்

Pagetamil

ஆற்றங்கரையோரம் ஒய்யாரமாக தூங்கும் யானைகள்

Pagetamil

பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டதால் நாமலுக்கு வந்த கவலை!

Pagetamil

‘எங்கள் ஆட்கள் யாராவது இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியதை நிரூபிக்க முடியுமா?’: கருணா விடும் புது ‘கப்சா’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!