பிள்ளைகளின் முன்னிலையில், தனது மனைவியை கோடாரியால் வெட்டிக் கொன்ற இலங்கைப் பின்னணியுடைய கணவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்று 37 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இது ஒரு மிருகத்தனமான மற்றும் கொடூரமான தாக்குதல் என்று நீதிபதி விவரித்தார்.
விக்டோரியா மாநில உச்ச நீதிமன்ற நீதிபதி அமண்டா ஃபொக்ஸ் இன்று (19) இந்த தீர்ப்பை வழங்கினார்.
47 வயதான தினுஷ் குரேராவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பரோலுக்கு தகுதி பெறுவார்.
டிசம்பர் 3, 2022 அன்று மெல்போர்ன் வீட்டில் தனது மனைவி நெலோமி பெரேராவை கோடரியால் மற்றும் கத்தியால் பலமுறை குத்தியபோது, தான் தற்காப்புக்காக செயல்பட்டதாக குரேரா கூறினார்.
ஆனால் ஒரு நடுவர் மன்றம் அவரது கதையை நிராகரித்தது. ஓகஸ்ட் மாதம் மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு அவரை கொலைக் குற்றவாளி என அறிவித்தது.
நீதிபதி ஃபொக்ஸ், கொடூரமான என்று விவரித்தார், குரேரா தெளிவாக ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறினார்.
“நெலோமி உங்களை விட்டு வெளியேறியதற்காகவும், உங்களை வீட்டிலிருந்து ஒதுக்கிவைத்ததற்காகவும், மற்ற ஆண்களைப் பார்த்ததற்காகவும், அவர் கொல்லப்பட வேண்டியவர் என உங்கள் மனதில் தீர்மானித்துள்ளீர்கள்.” என நீதிபதி குறிப்பிட்டார்.
குரேராவின் டீன் ஏஜ் குழந்தைகள் தாக்குதலைக் கண்டுள்ளனர். அவரது 16 வயது மகள் கத்தியைப் பிடித்தபடி அவரைத் தடுக்க முயன்றார்.
இரண்டு குழந்தைகளும் விசாரணையில் சாட்சியங்களை அளித்தனர்.