27 C
Jaffna
December 19, 2024
Pagetamil
இலங்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க புதிய தலைவர், செயலாளர் தெரிவு!

நேற்றைய தினம் (18.12.2024) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ. எம். தாஜுதீன் தலைமையில் சங்கத்தின் 24வது ஊழியர் ஒன்றுகூடலும் 2024/2025 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவும் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இரு கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் அமர்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் கௌரவ அதிதியாக பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுடீனும் பங்குகொண்டு உரையாற்றினார்.

நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம்.ரீ. எம். தாஜுதீன், கடந்த காலங்களில் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தது போன்று எதிர்வரும் முன்னெடுப்புகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஒற்றுமையாக செயலாற்றுவதனூடாகவே எங்கள் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று கூறினார்.

பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தனது உரையில், அணிகள் வித்தியாசமின்றியும் மனிதாபிமான ரீதியாகவும் ஊழியர்கள் விடயத்தில் தான் எப்போதும் நடந்து கொள்வதாகவும் நிறுவனத்தின் தலைவர் என்ற அடிப்படையில் எந்த ஊழியரதும் உரிமைகளுக்கு எதிராக நடந்து கொண்டதுமில்லை என்றும் தெரிவித்தார்.

கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்த நூலகர் எம்.எம். றிபாவுடீன், தான் பல்கலைக்கழகத்தின் ஆரம்பம் முதல் சகல ஊழியர்களுடனும் இணைந்து பணியாற்றுவதாகவும் ஊழியர்களின் நலன் விடயத்தில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தெரிவித்ததுடன் ஊழியர்கள் ஒற்றுமையாக செயற்படுவதனூடாகவே உச்ச உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் கீர்த்திக்கு பங்கம் ஏற்படாத முறையில் கடந்த காலங்களில் ஊழியர்களின் போக்குகள் இருந்ததாகவும் தற்போது சில ஊழியர்கள் சமூக ஊடகங்கள் ஊடாக குறைகளை கூற முற்படுவதாகவும் அவ்வாறான வழிமுறைகளை தவிர்த்து கூட்டாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவிய ஊடகவியலாளர்களான மீராசாஹிப் சஹாப்தீன் மற்றும் முகம்மட் யூசுப் அமீர் ஆகியோர் கெளரவிக்கப்பட்டதுடன் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் கவிதைகள் மற்றும் பாடல்கள் யார்த்த பீர் முகம்மது ஹிதாயத்துல்லாஹ் குழுவினரும் கௌரவிக்கப்பட்டதுடன் பல்கலைக்கழக சேவைக்காலத்தில் 25 வருடங்களை பூர்த்தி செய்த ஊழியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

இரண்டாம் அமர்வில் சங்கத்தின் தற்போதைய நிலவரம் கடந்த கால செயற்பாடுகள் நிதி நிலைமைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய முன்னெடுப்புக்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டன. இதன் போது, 2024/2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவாகினர். அதன் அடிப்படையில்

சங்கத்தின் தலைவராக காதர் முகைதீன் அஹமட் முனாஸ்ஸும், உப தலைவராக ஆதம் லெப்பை முஹம்மட் ஹஸ்மிரும், செயலாளராக முஹம்மது மக்பூல் முஹம்மது காமிலும், உப செயலாளராக முகம்மட் தம்பி ஹாஸிர் முகம்மட்டும், பிரயோக விஞ்ஞான பீடத்தின் உப செயலாளராக பீர் முகம்மது ஹிதாயத்துல்லாஹ்ஹும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

எலிக்காய்ச்சலால் வளர்ப்பு மிருகங்களும் பாதிக்கப்படலாம்!

Pagetamil

முள்ளிவாய்க்காலில் 103 ரோஹிங்கியா அகதிகளுடன் கரையொதுங்கிய படகு!

east tamil

விமானத்தில் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து உணர்ச்சி கொண்ட இலங்கையருக்கு நேர்ந்த கதி!

Pagetamil

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற இலங்கையருக்கு அவுஸ்திரேலியாவில் 37 வருட சிறை!

Pagetamil

நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது!

Pagetamil

Leave a Comment