26 C
Jaffna
December 19, 2024
Pagetamil
மலையகம்

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

நேற்று (18.12.2024) பிற்பகல் இறந்த சிறுத்தை ஒன்றின் உடல் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதி பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தையே கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Pagetamil

கண்டியில் வாகன விபத்து – பாடசாலை மாணவி உயிரிழப்பு

east tamil

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

Leave a Comment