பாராளுமன்றத்தில் நேற்று (17.12.2024) இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்குரிய காகிதாதிகளுக்கான குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பொதுஜன பெரமுனவின் எம்.பி. டி.வி.சானக சபையில் சர்ச்சைக்குரிய விடயங்களை கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான டி.வி.சானக, ‘‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைத்து டயஸ்போராக்களின் விருப்பத்திற்கிணங்க செயற்படாதீர்கள் எனவும், பாதாளக் குழுக்களும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றல்ல எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் தென்னந்தோட்டங்களைப் பாதுகாக்க இராணுவத்தினரை வழங்கமுடியாதென தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கருத்துக்கு சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த நாட்டில் யுத்தத்தை முடித்து வைத்தவர் மஹிந்த ராஜபக்ஷ. யுத்தம் நடந்தபோது 05 நிமிடங்களுக்கு 30 கோடி ரூபா செலவானது. இன்று அந்த நிலை இல்லை. அவ்வாறான நிலையில், யுத்தத்தை முடித்து இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கு உங்களினால் 30 கோடி ரூபா செலவிடமுடியாதா? பாதாளக்குழுத் தலைவர்களுக்கே பலர் பாதுகாப்பு வழங்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாதா? மஹிந்த ராஜபக்ஷவை பாதாளக்குழுத் தலைவர்களுடன் ஒப்பிட வேண்டாம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் பாதுகாப்பை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்குவதற்கு இருவரும் ஒன்றல்ல. எனவே, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாதுகாப்பைக் குறைத்து டயஸ்போராக்களின் விருப்பத்துக்கிணங்க செயற்படாதீர்கள்’’ என்றார்.
இதனால் விசனமடைந்த தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் எழுந்து, ‘‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட
மஹிந்த ராஜபக்ஷவின் தென்னந்தோட்டங்களைப் பாதுகாக்கத்தான் பயன்படுத்தப்பட்டார்கள். வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டார்கள். வளவுகளை சுத்தம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு இராணுவத்தினரை பயன்படுத்த அனுமதிக்க முடியாது’’ என்றனர். இதனால் இருதரப்புகளுக்குமிடையில் சிறிது நேரம் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.