நிலாவெளியில் 3417 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அப் பகுதியில் விவசாயத்தினை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு நிலாவெளி கமநல சேவைகள் சங்கத்தால் MOP பசளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறு நீர்ப்பாசன, பெரும் நீர்ப்பாசன நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒரு ஏக்கருக்கு 12 kg என்ற அளவிலும், மானாவரியில் (வரட்சி மழைக்கேற்ப நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் விவசாயம்) ஈடுபடுவோருக்கு ஒரு ஏக்கருக்கு 10 kg என்ற அளவிலும் பசளைகள் வழங்கப்படவுள்ளன.
தொடர்ந்து 3 நாட்களுக்கு (18,19,20ம் திகதிகளில்) இப் பசளை விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
மொத்தமாக 12 விவசாய சங்கங்கள் நிலாவெளியில் காணப்படுவதோடு, இன்று (18.12.2024 புதன் கிழமை) நிலாவெளியை சார்ந்த 3 விவசாய சங்கங்களுக்கும், நாளை, நாளை மறுதினம் ஏனைய விவசாய சங்கங்களுக்கும் பசளை விநியோகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.