26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அங்கு நினைவாலயம் ஒன்றை கட்டமைக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (17.12.2024 – செவ்வாய்க்கிழமை) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, இதனை அவர் கூறினார்.

2009ம் ஆண்டு இறுதிப்போரில் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகள் பலியான அந்த வேதனை இன்னும் ஆறவில்லை. அப்போரின் துயரத்தால், தமது உறவுகளை இழந்த மக்கள் மன உளவியலிலே இயலாமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த பேரவலத்தை நினைவுகூரவும், உயிரிழந்த உறவுகளின் பெயர்களை வரலாற்றில் நிலைத்து நிறுத்தவும் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் கட்டப்படவேண்டும் என அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும், உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனத்துக்கு இதுபோன்று நினைவு அமைப்பது அவசியம் என்றும், பேரவலத்தில் பலியானோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஒரு நினைவு சின்னம் எமது இனத்தின் வரலாற்று அடையாளமாகவும், மீளமுடியாத துயரத்தின் சாட்சியாகவும் இருக்கும் என அவர் வலியுறுத்தி கூறினார்.

இலங்கையின் பல பாகங்களில் ஆழிப்பேரலையில் உயிரிழந்த மக்களுக்கென நினைவுமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளதைப் போல, முள்ளிவாய்க்கால் நினைவிடமும் எமது உறவுகளை நினைவுகூர வழிவகுக்கும். உயிரிழந்தோர் உறவுகள், சந்ததிகள் ஒவ்வொரு வருடமும் தம் நினைவுகளை வெளிப்படுத்தி ஆறுதலடைவதற்கு இது முக்கியம் என்ற அடிப்படையில் அவர் பல கருத்துக்களை தெரிவித்தார்.

மேலும், “இனப்பாகுபாடு பாராமல், முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்,” என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment