26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
கிழக்கு

அம்புலன்ஸ் விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று (17.12.2024 செவ்வாய்க்கிழமை) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இவ்விபத்தில் 03 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து புறப்பட்டு, களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்ற கொண்டிருந்த அம்புலன்ஸ், அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மோதியுள்ளமையால் குறித்த இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், அம்புலன்ஸில் பயணித்த சாரதி உட்பட 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து குறித்து களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான செயலமர்வு

east tamil

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

east tamil

காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு

east tamil

திருக்கோணமலை மட்கோ சந்தியில் வெள்ளம்

east tamil

கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி

east tamil

Leave a Comment