ரஷ்ய தலைநகரில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிப்பில் அந்த நாட்டின் அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான மூத்த ஜெனரல் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், கிரெம்ளினில் இருந்து தென்கிழக்கே ஏழு கிமீ (4 மைல்) தொலைவில் ரியாசான்ஸ்கி ப்ரோஸ்பெக்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே கொல்லப்பட்டார்.
“ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்” என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
ரஷ்ய டெலிகிராம் சனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், இடிபாடுகளால் சிதறிய கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடப்பதைக் காட்டியது.
RKhBZ எனப்படும் ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு துருப்புக்கள், கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் மாசுபாட்டின் நிலைமைகளின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகள்.
திங்களன்று, உக்ரேனிய வழக்கறிஞர்கள், உக்ரைனில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கிரில்லோவ் மீது குற்றஞ்சாட்டினார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.