தந்தையின் முன்பாக விபத்தில் பலியான மாணவி

Date:

இன்று (16) காலை, கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தை மீன் சந்தைக்கு முன்பாக கெட்டம்பே திசையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் வாகனத்துடன் மோதி கீழே விழுந்த நிலையில், மற்றொரு வாகனத்தின் மகளின் தலை சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கிய 17 வயதுடைய மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவர் கண்டி கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

உயர்தர தனியார் வகுப்பில் கலந்துகொள்வதற்காக குறித்த மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கண்டி நோக்கி வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர் கெலிஓயா, பெத்தியகொட பகுதியைச் சேர்ந்த இஷால தேஷானி கதிகனெல்ல என்ற மாணவி ஆவார்.

விபத்தில் தந்தைக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி...

தலவாக்கலையில் மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 39 வயதுடைய நபர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்