26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
விளையாட்டு

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நடாத்தப்பட்ட மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளன அங்கீகாரத்துடன் இடம்பெற்ற இந்தச் சுற்றுப் போட்டியில் இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக் கழகங்களினதும் ஆண், பெண் அணிகளுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றன.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் எஸ்.மதிவாணன் மற்றும் பொது வைத்திய நிபுணர் அனோஜா மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளனத் தலைவரும், இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

போட்டிகள், கடந்த சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் ஆரம்பமாகின. இறுதிப்போட்டி ஞாயிற்றுக் கிழமை பி.ப 02.30 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்கள் பிரிவில், மொரட்டுவப் பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர, களனியப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.

பெண்கள் பிரிவில், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. மொரட்டுவ, கொழும்புப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெற்றியுடன் டிம் சவுதிக்கு பிரியாவிடை கொடுத்த நியூசிலாந்து!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

Leave a Comment