24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

வெளிநாட்டில் தனியார் பல்கலையில் பட்டம் பெற்றுவிட்டு, இலங்கையில் தனியார் பல்கலையை எதிர்த்த ஜேவிபி பிரமுகர்!

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கல்வித் தகுதிகள் குறித்த சர்ச்சையை தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை துறந்தார். இந்த விவகாரத்தில் அசேக சபுமல் ரன்வலவின் சில சுயமுரண்கள் தொடர்பான சுவரஸ்ய தகவல்கள் இவை.

தெற்காசிய தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கழகம் (SAITM) உள்நாட்டில் மருத்துவப் பட்டங்களை வழங்க முயற்சித்தது தொடர்பான சர்ச்சையின் போது ரன்வல அரச மருத்துவ பீடங்களின் பெற்றோர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவர் 2018 இல் அதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தார். SAITM பட்டத்தின் தரம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், இது ஒரு ‘பட்டம் கடை’ என்று கூறி, ஒரு பட்டத்தை பணத்திற்கு வாங்க முடியும் என குறிப்பிட்டதை அந்த சமயத்தின் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

SAITM செயற்பாடுகளை நிறுத்துவதற்கு வழிவகுத்த போராட்டங்கள் வெற்றியடைந்தன. ஆனால் ரன்வல இப்போது தேசிய அளவில் தனது சொந்த உயர்கல்வியின் நேர்மை கேள்விக்குறியாகி, அவரை சபாநாயகர் பதவியில் இருந்து விலகச் செய்தது.

அவர் தனது உயர் கல்வியைப் பெற்றதாகக் கூறும் Waseda பல்கலைக்கழகம், ஜப்பானில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம்.

SAITM இன் சாதக பாதகங்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மாணவர்கள் வெளிநாட்டுப் பட்டங்களைப் பெறுவதற்காக அந்நியச் செலாவணியைச் செலவழிப்பதைத் தடுப்பதற்காகவே இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதாக, அதை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரன்வல இதை கடுமையாக எதிர்த்தார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் மற்றொரு சுவாரஸ்யமாக- தற்போதைய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியின் பேஸ்புக் இடுகை அமைந்துள்ளது.

சபாநாயகரின் கல்வித்தகைமை சர்ச்சையாகி, அவர் சபாநாயகர் பதவியை துறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, வெளிநாட்டில் பட்டம் பெற்ற வைத்தியரான சாலி ஒரு இடுகையை வெளியிட்டார், “தலைமையில் நம்பிக்கையையும் பொறுப்புணர்வையும் பேணுவது அவசியம் என்று நான் நம்புகிறேன். அந்த உணர்வில், எனது தொழில்முறை தகுதிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் 1986 இல் பாகிஸ்தானின் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் லாரிங்கோ ஓட்டோரினாலஜி (DLO) டிப்ளோமாவும் பெற்றுள்ளேன். எனது தகுதிகளைப் பகிர்வதன் மூலம், என் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன்“ என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment