சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், 12.5 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ காஸ் லங்கா லிமிடெட் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
பங்குகளை முறையாக நிர்வகித்ததன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலை ரூ. 3,690.
5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ. 1,482.
2.3 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ. 694
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1