பூனாவ கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதுடைய கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் என்றும் நிட்டம்புவ பகுதியை சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடற்படை உத்தியோகத்தர் அருகிலுள்ள கடையொன்றில் உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதே யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1