25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

விளக்கேற்ற வருமாறு அழைத்து விட்டு 3 மாவீரர்களின் தாயை திருப்பி அனுப்பி அவமதிப்பு: மாவீரர்நாள் வியாபார அதிர்ச்சிச் சம்பவம்!

26.11.2024 அன்று மாலை 6.55 மணிக்கு 0776913244 என்ற தொலைபேசி
இலக்கத்திலிருந்து தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள்
நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா என வினவியவர் எனது மூன்று
பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர் சொன்னார், நாளை(27)
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற
வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன்

ஆனால் மாவீரர் நாளன்று 6.05 மணிக்கு விளக்கேற்றும் நேரம் நான் சரியாக 5
மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றேன். அங்கு நின்றவர்கள்
தங்களை ஏற்பாட்டுக் குழு எனத் தெரிவித்து நாங்கள் வேறொருவரை ஏற்பாடு
செய்துவிட்டோம் எனத் தெரிவித்து என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இது
எனக்கு மிகுந்த மன வேதனையை தருக்கிறது. மூன்று மாவீரர்களின் தாயான என்னை
இவர்கள் அவமதித்துவிட்டனர் என பூநகரியைச் சேர்ந்த கப்டன் சிவரூபன்,
வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரின் தாயாரான நடராசா சீலாவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

எனது குடும்பத்தில் 5 பிள்ளைகள் இயக்கத்தில் இணைந்தார்கள். இதில் மூன்று பேர் வீரச்சாவு. ஏனைய இருவரில் ஒரு மகளை இயக்கமே இயக்கத்திலிருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருந்தனர். அவர் 2009 ஆம ஆண்டு கிபிர் தாக்குதலில்
இறந்துவிட்டார். மற்றவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார். நானும்
எனது கணவரும் பேரப்பிள்ளை ஒன்றை வளர்த்து வருகின்றோம். கணவர் கள்ளு
கடைக்கு முன்னாள் வடை விற்று வருகின்ற பணத்தில்தான் மிகுந்த
வறுமைக்குட்பட்டு வாழ்ந்துவருகின்றோம்.

26 ஆம் திகதி இயக்க காலத்திலேயே எங்கள் குடும்பத்துடன் அறிமுகமான
முன்னாள் போராளி பாலன் என்பவர் என்னை தொடர்பு கொண்டு கனகபுரம் மாவீரர்
துயிலுமில்லத்தில் விளக்கேற்றுவது தொடர்பில் இயக்கத்தின் மத்திய குழு
உறுப்பினராக இருந்த காக்கா அண்ணன் உங்களுடன் தொடர்பு கொள்வார் எனத்
தெரிவித்தார்.

அவர் கூறி சில நிமிடங்களில் சிறிதரன் எம்பி தொடர்பு கொண்டு வீரச்சாவடைந்த எனது பிள்ளைகளின் விபரங்களை கேட்டறிந்த பின்னர், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு விளக்கேற்ற வருமாறு அழைத்தார்.

அவரின் அழைப்பிற்கு அமைய முழங்கால் வரை தண்ணீரால் நிரம்பியுள்ள எனது
வீட்டுக்குச் செல்லும் பாதையால் சிரமத்திற்கு மத்தியில் பிரதான வீதிக்கு
வந்து வாகனம் ஒன்றில் மாவீரர் நாளன்று சரியாக 5 மணிக்கு கனகபுரம்
மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றேன். ஆனால் அங்கு நான் அவமதிக்கப்பட்டேன். வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டோம் என்று கூறி என்னை திருப்பி அனுப்பிவிட்டனர். இது எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இயக்கம் ஒரு மாவீரரின் தாயை கூட இவ்வாறு நடத்தியது கிடையாது. இந்த மண்ணுக்காக நான் எனது மூன்று பிள்ளைகளை கொடுத்திருகின்றேன் எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

Leave a Comment