மன்னம்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால் பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்தை முற்றாக நிறுத்த பொலன்னறுவை முகாமைத்துவ அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
மன்னம்பிட்டிய ஊடாக தெஹியத்தகண்டி பகமூன வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் என பொலன்னறுவை அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து அதன் பத்து கதவுகளையும் தலா ஒரு அடி வீதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வினாடிக்கு 100,000 அடி தண்ணீர் மகாவலி ஆற்றில் விடப்படும் என பொலன்னறுவை நீர்ப்பாசன பொறியியலாளர் அஞ்சன அபேசிங்க குறிப்பிட்டார்.
இன்று (26) இரவுக்குள் பத்து வாயில்களை மூன்றடி அளவுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அபேசிங்க தெரிவித்தார்.