26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
மலையகம்

குளவிக் கொட்டால் 7 தொழிலாளர்கள் பாதிப்பு!

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று (23) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும், ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Leave a Comment